search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை அபேஸ்"

    மதுரையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 35 பவுன் நகையை இளம்பெண் அபேஸ் செய்தார்.
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம், மடத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜெகதா (வயது 65). இவர் உறவினர் திருமணத்திற்காக மதுரை வந்தார்.

    விழாவில் பங்கேற்றுவிட்டு ஊருக்கு செல்வதற்காக ஜெகதா ஆரப்பாளையம் வந்தார். அங்கிருந்து மாட்டுத் தாவணிக்கு செல்ல நகர பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது அவரது அருகே இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த பெண் சில்லறையை கீழே போட்டுவிட்டதாக கூறி இருக்கைக்கு அடியில் தேடினார். அதன் பிறகு அவர் சிம்மக்கல் நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

    பஸ் மாட்டுத்தாவணி சென்றதும் தனது பேக்கை ஜெகதா எடுத்தபோது அது திறந்திருந்தது தெரியவந்தது. அந்த பேக்கில் ஜெகதா வைத்திருந்த நகைப்பை மாயமாகி இருந்தது.

    எனவே பஸ்சில் சில்லறையை தொலைத்து விட்டதாக இருக்கைக்கு அடியில் தேடிய இளம்பெண் தான் நகைப்பையை அபேஸ் செய்திருக்கலாம் என ஜெகதா கருதினார்.

    இது குறித்து அண்ணாநகர் போலீசில் ஜெகதா புகார் செய்தார். அதில், மாயமான பையில் 35 பவுன் நகைகள், ஒரு ஜோடி வெள்ளி வளையல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனக்கன்குளம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா (39). நேற்றிரவு 12 மணியளவில் காம்ப்ளக்ஸ் பஸ் நிறுத்தத்தில் சுல்தான் பாட்ஷா நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கரும்பாலை மணிமுத்து (23), மீனாட்சிபுரம் சுப்பிரமணி (36), மேலவாசல் ஆனந்த் (31) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    சுல்தான் பாட்ஷா பணம் கொடுக்க மறுத்ததால் அவரது செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து திடீர்நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 3 பேரையும் கைது செய்தனர்.
    திருவாரூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் மனைவி குணசுந்தரி (வயது 62). இவர் நேற்று மயிலாடுதுறைக்கு சென்று அங்குள்ள ஒரு நகைக் கடையில் 2¼ பவுனில் ஒரு செயின் வாங்கினார். அதனை பையில் வைத்து கொண்டு பஸ்சில் திருவாரூர் வந்தார்.

    அப்போது பஸ்சில் வைத்து மர்ம நபர் குணசுந்தரி வைத்திருந்த நகையை அபேஸ் செய்து விட்டார். வீட்டுக்கு சென்ற குணசுந்தரி பையில் வைத்திருந்த செயின் மாயமாகி விட்டதை அறிந்து திடுக்கிட்டார். இதனால் வேதனை அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் இதுபற்றி அவர் திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரோண்யா வழக்குப்பதிவு செய்து குணசுந்தரியிடமிருந்து நகையை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகிறார்.

    ஓடும் பஸ்சில் சுகாதார ஊழியரிடம் 5½ பவுன் நகையை அபேஸ் செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மங்கப்புஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் பீர்முகம்மது. இவரது மனைவி முகைதீன் பாத்திமா (43) செம்பனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தனியார் பஸ்சில் கல்லூரிக்கு சென்றார். அவர் பயணம் செய்த பஸ் ஒத்தக்கடை பஸ் நிறுத்தத்தில் நின்றபோது 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஏறினார்.

    முகைதீன் பாத்திமா அருகே அமர்ந்திருந்த அந்த பெண் மேலூர் பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது முகைதீன் பாத்திமா பையில் 5½ பவுன் நகை இருந்த மணிபர்சு மாயமாகி விட்டது. இதனை அந்த பெண் அபேஸ் செய்து விட்டு தப்பியதை அறிந்த முகைதீன் பாத்திமா கூச்சலிட்டார். உடனே மற்ற பயணிகள் அந்த பெண்ணை மடக்க பிடித்து மேலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் முகைதீன் பாத்திமா வின் மணிபர்சை திருடியது தெரியவந்தது. அதில் இருந்த 5½ பவுன் நகையும் மீட்கப்பட்டது. மணிபர்சை திருடி தப்ப முயன்ற அந்த பெண் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி மீனாட்சி (28) என்பது தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் வேறு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அருகே சாமி கும்பிட்ட போது பெண்ணிடம் 11 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் காசம்மாள் (வயது 65). இவர் தனது மகன் மற்றும் மருமகன், குடும்பத்துடன் மதுரை அருகே விளாச்சேரியில் உள்ள ஆதி சிவன் கோவிலில் நேற்று சாமி கும்பிட்டார்.

    கோவில் கருவறை அருகே நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்த போது திடீரென காசம்மாள் அணிந்திருந்த 11 பவுன் நகையை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டு தப்பி விட்டனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

    இது குறித்து காசம்மாள் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    ×